The Millionaire Next Door: The Surprising Secrets of America's Wealthy
What Is The Millionaire Next Door formula?
கோடீஸ்வரர்கள் பற்றிய நமது பிம்பம்:
பரம்பரை பணக்காரர்கள். அதாவது ஆங்கிலத்தில், Born with Silver spoon, வெள்ளி கரண்டியுடன் பிறந்தவர்கள் என்று சொல்வோம். பணத்தை தண்ணீரைப் போல் கொட்டி செலவு செய்பவர்கள் . விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிந்து, விலையுயர்ந்த வாகனத்தில் பயணம் செய்பவர்கள்.
உழைக்காமல் கேளிக்கைகளில் ஈடுபட்டு வாழ்பவர்கள் வீட்டில் எஜமானியம்மா, பல வேலைக்காரர்கள் வேலை செய்ய, சொகுசாக வாழ்பவர்
சரியான படிப்பு இல்லாமல், வேலைக்காரர்கள் மற்றும் உதவியாளர்களை நம்பி, கையெழுத்து போட்டு வாழ்பவர். கோடீஸ்வர வீட்டுப்பிள்ளைகள் உதவாக்கரைகளாக தந்தையை நம்பி வாழ்வார்கள். பணக்காரர்கள் குடியிருப்புகள் ஒரு சேர, ஒரே பகுதியில் குடியிருப்பார்கள். இந்த பிம்பம் உண்மையானதா?
அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் டங்கோ(William Danko) மற்றும் தாமஸ் ஸ்டான்லி(Thomas Stanley), அமெரிக்காவின் மில்லியனர்களைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி செய்தனர். மில்லியனர் என்றால் 10 லட்சம் அமெரிக்க டாலர்களை சொத்தாக அமையப் பெற்ற பணக்காரர்கள். நம் நாட்டின் வட்டார வழக்கப்படி கோடீஸ்வரர்கள் என குறிப்பிடலாம். இந்த ஆராய்ச்சி முடிவுகள் நம்முடைய பல்வேறு பிம்பங்கள் தவறானவை என நிரூபிக்கின்றன. ஆராய்ச்சியின் முடிவுகளை "The Millionaire Next Door" என்ற புத்தகமாக வெளியிட்டனர்.
ஆராய்ச்சி முடிவின் படி, மாதிரி கோடீஸ்வரரின் அடையாளங்கள் பின் வருமாறு;
அவருக்கு 57 வயது சுய தொழில் செய்து வருகிறார்
சுவாரசியமில்லாத தொழில் செய்து வருகிறார். உதாரணமாக, வெல்டிங் வியாபாரம், சாலை செப்பனிடும் குத்தகைக்காரர் ஆண்டிற்கு 247,000 டாலர் சம்பாதிக்கிறார். இந்திய மதிப்பின் படி, 1.6 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டிற்கு சம்பாதிக்கிறார்.
வீட்டின் சொத்து மதிப்பு 3.7 மில்லியன் டாலர் ஆக இருக்கிறது. இந்திய மதிப்பின் படி, 20 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கிறார்
சொந்த வீட்டுக்காரராக இருக்கிறார். அவருடைய வீட்டின் மதிப்பு 320 ஆயிரம் டாலராக இருக்கிறது. இந்திய மதிப்பின் படி, 2.1 கோடி ரூபாய் மதிப்புடைய சொந்த வீடு வைத்திருக்கிறார் முதல் தலைமுறை பணக்காரராக இருக்கிறார்
சிக்கனமான வாழ்க்கை நடத்துகிறார். சாதாரண உடை அணிகிறார். உள்நாட்டில் தயாரான விலை குறைந்த வாகனத்தையை உபயோகிக்கிறார்
அடுத்த 10 வருடங்களுக்கு வீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு பணத்தை சேமித்து வைத்துள்ளார் அரசு பள்ளியில் படித்துள்ளார். குழந்தைகளை சிறந்த தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்
ஒரு வாரத்திற்கு 45 முதல் 55 மணி வரை உழைக்கிறார் 20% சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து பெருக்குகிறார் சாதாரண குடியிருப்பு பகுதியில் வசிக்கிறார். அந்த சாதாரண குடியிருப்பு வாசிகளைப் போல், 6.5 மடங்கு சொத்து வைத்துள்ளார். நன்கு படித்தவராக இருப்பார்.
அவரது மனைவி வேலைக்கு செல்லாமலோ அல்லது ஆசிரியராகவோ இருப்பார் அவரை விட, அவரது மனைவி இன்னும் சிக்கன வாழ்க்கை வாழ்வதை கடைப்பிடிப்பார். இந்த மாதிரி கோடீஸ்வரரின் அடையாளம், நமது கோடீஸ்வரர்களைப் பற்றிய தவறான பிம்பத்தை தகர்க்கிறது. கோடீஸ்வரர்களின் 7 குணாதியசங்களை பட்டியலிடுகின்றனர்.
1. சம்பாதிப்பதை விட குறைவாக செலவு செய்து வாழ்க்கை நடத்துபவர்கள்
2. தங்களுடைய நேரம், உழைப்பு, பணத்தை திறமையாக கையாண்டு பணத்தை மேலும் பெருக்குகிதறார்கள்
3. பணத்திற்காக யாரையும் கையேந்தாமல், தன்னிறைவை அடைவதென்பதே முக்கியம். பகட்டாக வாழ்ந்து பணக்காரராக காட்டிக் கொள்வது முக்கியமல்ல.
4. அவர்களுடைய பெற்றோர் பணத்தால் அவர்களுக்கு உதவி , அவர்களை பணக்காரர் ஆக்கவில்லை
5. அவர்களின் குழந்தைகளும் சொந்தக்காலில் நிற்கிறார்கள். பெற்றோர்களை சார்ந்து வாழவில்லை
6. வாழ்வின் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்
7. அவர்கள் தங்களுக்கு ஏற்ற சரியான தொழிலை தேர்ந்தெடுத்து செய்கிறார்கள்
இதன் மூலம், பணக்காரர்களைப் பற்றிய நமது பிம்பம் எவ்வளவு தூரம், பொய்யானது என்பது தெளிவாகிறது. ஆங்கிலத்தில் ‘Keeping with Joneses' என்று கூறுவர். அதாவது, அடுத்த வீட்டுக்காரர்களை கொண்டு, நம்முடை வாழ்க்கைத் தரத்தை முடிவு செய்வது. அடுத்த வீட்டுக்காரர் கார் வாங்கினால், நாமும் வாங்குவது. அடுத்த வீட்டுக்காரர் பெரியதொலைக்காட்சி வாங்கினால், நாமும் வாங்க முயல்வது. இதில், அடுத்தவீட்டுக்காரரை விட, பணக்காரர்களை கொண்டு, நாம் நமது
வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதை நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். பணக்காரர்களை போல தோற்றமளிக்க விலையுயர்ந்த ஆடை அணிவது, விலையுயர்ந்த கார் வாங்குவது, விலையுயர்ந்த உணவகத்தில் உண்பது என , பணக்காரர்களை போல தோற்றமளிக்க நாம் முயற்சிக்கிறோம்.
எனவே, பணக்காரராக தோற்றத்தை ஏற்படுத்துவதை தவிர்ப்போம். நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைவிட, நாம் அடுத்தவர்களை கையேந்தாமல் வாழும் சுதந்திர வாழ்க்கையே முக்கியம். நாமும் சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்து, பணத்தை வீண் செலவு செய்யாமல் , சிறந்த முறையில் முதலீடு செய்வதன் மூலமே பணக்காரராக முடியும். ஏதோ அதிர்ஷ்டத்தின் மூலமாக எளிதாக பணக்காரர் ஆக முடியாது. பணக்காரர் ஆன பின்பும், சிக்கன வாழ்க்கையின் மூலமாகவே, பணக்காரராக தொடர முடியும். ஆடம்பர, பகட்டான வாழ்க்கை வாழ்ந்தோமென்றால், கூடிய விரைவில், பிறரை கையேந்த நேரிடும்.
Post a Comment
0 Comments