The Alchemist
English
புத்தகம் என் வாழ்கையின் ஒரு மைல்கல்லாக அமைந்தது...
அது ஒரு சிறுவனின் கதை, எப்படி அவன் தன் கனவை நோக்கி விடா முயற்சியோடு பயணிக்கிறான் என்பதை ஆசிரியர் மிக அழகாக கூறியிருப்பார்.
கதையின் ஆரம்பம் சிறு கிராமத்தில் ஆடுகள் மேய்க்கும் சிறுவனுடன் தொடங்கும். அவனை பற்றியும், அந்த சிறுவன் எப்படி ஆடு மேய்க்கும் தொழிலுக்கு வந்தான் என்றும் கூறி சில பக்கங்கள் செல்லும் . அவன் தூங்கும் போது, தினமும் ஒரு கனவு (ஒரே கனவு) மறுபடி மறுபடி வந்துகொண்டிருக்கும். அது ஒரு புதையல் பற்றிய கனவு, எகிப்தின் பெரிய கூர்கோபுரம் (The great pyramid) ஒன்றின் அருகில் பல புதையல் புதைந்து கிடப்பது போன்ற கனவு.
அது சாதாரண கனவுதான் என்று அதனை பொருட்படுத்தமாட்டான். ஆனால், அது திரும்ப திரும்ப வந்துகொண்டிருக்கும். அதை பற்றி சோதிடர் ஒருவன்னிடம் கேட்பான், அவரோ நீ அந்த புதையலில் பாதியை தருவதாக இருந்தால் உனக்கு உதவி செய்கிறேன் என்பான். அதற்கு ஒப்புக்கொண்டு, அவனிடம் ஆலோசனை பெறுவான்.
பிறகு தன் அனைத்து ஆடுகளையும் விற்றுவிட்டு எகிப்து நோக்கி பயணிப்பான். வழியில் அவனுடைய மொத்த பணத்தையும் திருடிவிடுவார்கள்.
அப்போது அவனுக்கு தோன்றும், புதையல் இருக்கா இல்லியா என்று தெரியாத ஒன்றுக்காக அனைத்தையும் இழந்துவிட்டோமோ என்று. புதையல் இருக்கும் இடத்தை அடைய சஹாரா பாலைவனத்தை கடக்க வேண்டும், அதற்கு பணம் அதிகம் வேண்டும்.
அந்த சிறுவன் தேவையான பணத்தை எப்படி சம்பாதித்தான், பாலைவனத்தை கடந்தானா இல்லையா, புதையல் இருந்ததா? இல்லையா?, போகும் பதையில் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தான், பிரச்சனைகளை எப்படி சமாளித்தான் என்று மிகவும் சுவாரசியமாக ஏழுதப்பட்டிருக்கும்.
சிறுவர்களின் தன்னம்பிக்கை புத்தகம்
இது ஒரு பயணா புத்தகம்
குட்டி இளவரசனுக்கு இணையான புத்தகம்
Post a Comment
0 Comments