7 Habits of Highly Effective People







புத்தகத்தின் பெயர் செவன் ஹேபிட்ஸ் ஆஃப் ஹைலி எபெக்டிவ் பிபிள்! 7 Habits of Highly Effective People எழுதியவர் எழுதியவர் அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கோவீ!

இந்த புத்தகத்தை இரண்டு பகுதியாக பிரிக்கலாம்! அதாவது அடுத்தவர்களை சார்ந்து இருப்பது நம்முடைய சொந்த வெற்றி அடுத்தது எல்லோரையும் அனுசரித்து பெரும் கூட்டு வெற்றி!


அதாவது வாழ்க்கையில் 7 பழக்கங்கள் உங்களை வெற்றியாளராக மாற்றும்!

முதல் மூன்று பழக்கங்கள் உங்களுடைய தனிமை வெற்றியை உறுதிப்படுத்தும். அடுத்த மூன்று பழக்கங்கள் உங்களுடன் சேர்ந்து இருப்பவர்களையும் நீங்கள் அரவணைத்து, நீங்கள் எல்லோரும் சேர்ந்து வெற்றி பெறுவது எப்படி என்று எடுத்துச்சொல்லும். போனசாக ஒரு 7வது பழக்கம், உங்கள் கத்தியை தீட்டுவது அதாவது உங்கள் புத்தியை தீட்டுவது எப்படி? என்று மொத்தம் 7 பழக்கங்கள் வாழ்க்கையில் மிக சிறந்த மனிதர்கள் பயன் படுத்துவது!

சக்தி வாய்ந்த கோவீ சொல்லும் அந்த 7 பழக்கங்கள் தான் இந்த புத்தகம்!

இதை நீங்கள் கடைப்பிடித்தால் உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும் என்னென்ன பழக்கங்கள் உள்ளன என பார்க்கலாமா?

பழக்கம் 1 :

தன் முனைப்பாக இருங்கள். அடுத்தவர் சொல்லி செய்ய வேண்டும் என்று காத்திருக்காதீர்கள் நீங்களாக ஒரு செயலைத் தொடங்கி அதை முடிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று எடுத்துக் கொள்ளுங்கள்!




வாழ்க்கை என்பது ஒரு வட்டம்! இதில் வெளிவட்டம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. வானிலை வெயில் அடிப்பது, மழை பெய்வது, பெண்டாட்டி அடிப்பது எதுவுமே உங்கள் கையில் இல்லை!

அடுத்தவனை எழுப்புவது உங்கள் வேலை இல்லை. நீங்கள் எழுந்திருங்கள்! நீங்கள் உங்கள் வேலையை, நீங்களே எடுத்து போட்டுக்கொண்டு செய்யுங்கள்.

அதுதான் உள்வட்டம். அது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வட்டம்! நீங்கள் இந்த தன் முனைப்பாக செய்யும்போது, இந்த வட்டம் நாளாவட்டத்தில் பெருகிப் பெருகி எல்லாமே உங்கள் கட்டுப்பாட்டில் வரும்!



அதைத்தான் வாழ்க்கை ஒரு வட்டம் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருப்பார்கள் போல! நினைவில் கொள்ளுங்கள் நீங்கள்தான் தானாக முதலில் செயலில் இறங்க வேண்டும். உதாரணமாக, அரசியல் ஒரு சாக்கடை என்றால் அடுத்தவர்கள் மீது பழி போடுவதை விட்டுவிட்டு நீங்கள் இறங்கி சாக்கடையை சுத்தம் செய்யுங்கள்! சரியாக ஓட்டு போடுங்கள்! பணம் வாங்காமல் ஒட்டு போடுங்கள்.


பழக்கம் 2 :



முடிவை திட்டமிட்டு பின்பு ஆரம்பியுங்கள் எதையுமே ப்ளான் பண்ணாம செய்யக்கூடாது என்று வடிவேலு சொல்வது சரிதான் என்னுடைய கட்டிடத் தொழில் பிளான் இன் முக்கியத்துவத்தை மிக அழகாக சொல்லும் பிளான் செய்யவில்லை என்றால் நஷ்டத்தில் தான் முடியும் எனவே நான் என்ன செய்து முடிக்கப் போகிறோம் நான் என்ன ஆகப் போகிறோம் நான் என்ன சாதிக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்து விட்டு உங்கள் வேலையை ஆரம்பியுங்கள் நீங்கள் எங்கே போகப் போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டு பஸ் இருங்கள் போகும் பாதை போகுமிடம் தெரியவில்லை என்றால் நீங்கள் ஊர் போய் சேர முடியாது

பழக்கம் 3 :

முதலில் எதை செய்ய வேண்டுமோ அதை முதலில் செய்யுங்கள் உங்கள் வீட்டில் உங்க அம்மா திட்டுவது கேட்டிரக்கிறீர்களா முதல்ல போய் குளிச்சிட்டு வா அப்புறம் சாப்பிடலாம் அப்புறம் ஸ்கூலுக்கு போகலாம் இதுதான் சுவாட் SWOT அனலைசிஸ்!


இந்த நான்கு கட்டங்கள் நான்கு வகை வேலைகளை குறிக்கின்றது! இதில் முதல் கட்டத்தில் உள்ளது அதி முக்கியம்! அதாவது உடனே செய்ய வேண்டும்,அதுவும் முக்கியமான விஷயம்.


இப்போது உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றார் முதலில் உங்கள் உடம்பை கவனிக்க வேண்டும். அப்போது பெரிய சின்சியர் சிகாமணி மாதிரி வேலைக்கு போகிறேன் என்று போகக்கூடாது.




இதை நெருப்பு அணைக்கும் ஒரு செயலுக்கு ஒப்பாக சொல்லலாம்!

அடுத்த கட்டம் குவாலிட்டி டைம்! உங்களுடைய பொன்னான நேரம் முக்கியமானது ஆனால் உடனே செய்ய வேண்டும் என்று இல்லை! ஆனால் கண்டிப்பாக செய்ய வேண்டும். குழந்தைகளுடன் நேரம் செலவு செய்வது இதில் அடங்கும்!

இந்த கட்டம் முக்கியம்தான் ஆனால் தள்ளிப் போடலாம். உதாரணத்திற்கு உங்கள் மனைவிக்கு நகை வாங்கித் தருவது போன்ற செயல்களை கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்!


மூன்றாவது கட்டம், உடனே செய்ய வேண்டும் ஆனால் முக்கியமான விஷயம் இல்லை! உதாரணமாக ஒரு இங்கிதம் தெரியாத நண்பன், நீங்கள் அவசரமாக எங்கோ போகும்போது உதவி கேட்கிறான். அவனுக்கு ஏதாவது கொடுத்து தொலைத்தால், அவன் உடனே சென்று விடுவான். இல்லாவிட்டால் உங்கள் நேரம்தான், விரையம்!

நீங்கள் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில், பல முக்கியமான வேலைகள் போய்க்கொண்டு இருக்கும்! அதனால் அவனுக்கு முதல் ஏதாவது கொடுத்து தொலைத்து அனுப்பி வைக்க வேண்டும்!

நான்காவது கட்டம் அவசரமும் இல்லை முக்கியமில்லை இதுபோன்ற வேலைகள்! உதாரணத்திற்கு ஃபேஸ்புக் டிக் டாக் ஒன்று சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுவது இன்ஸ்டாகிராமில் படம் போடுவது சினிமா பார்ப்பது டிவி பார்ப்பது எல்லாம் இதில் அடங்கும். இதை முடிந்த மட்டும் செய்யாமல் விட்டுவிடுவது நல்லது மட்டுமல்ல, உங்களுக்கு அந்த நேரம், மற்ற மூன்று கட்ட வேலைகள் செய்வதற்கு பயன்படும்! வாழ்க்கையில் எல்லாம் முடித்து விட்டேன் என்றால், நீங்கள் தாராளமாக உங்கள் நேரத்தை சமூக வலைத்தளங்களில் செலவு செய்யலாம்! வேறு என்னதான் செய்வது?

இதுவரை நீங்கள் பார்த்த மூன்று பழக்கங்களும் உங்கள் சுய முன்னேற்றத்திற்கு உதவும் பழக்கங்கள்!

ஆனால் வாழ்க்கையில் நீங்கள் மட்டும் முன்னேறினால் போதாது.

உங்கள் குடும்பம், உங்கள் நண்பர்கள், ஏன் உங்கள் சமூகம் மற்றும் உங்கள் நாடு முன்னேற வேண்டுமென்றால், நீங்கள் தனித்தீவாக வாழாமல், எல்லோருடனும் நன்கு பழகி, எல்லோரையும் முன்னேற்றுவதற்கு தேவை ; மேலும் மூன்று பழக்கங்கள்.

இதுவரை பார்த்தது இண்டிபெண்டன்ட் Independant என்றால் இனிமேல் பார்க்கப்போவது இன்டர்டி பெண்டு இன்டெர்டெபென்டென்ட் ! மனித சமூகத்திற்கு இது மிக மிக முக்கியம்! நீங்கள் எப்போதுமே ஒரு டீம் லீடராக செயல்பட்டு, ஒரு டீமை வெற்றி பெற செய்ய வேண்டும்! நீங்கள் மட்டும் வெற்றி பெற்றால் பத்தாது, அதற்குதான் இந்த மூன்று பழக்கங்கள்!

பழக்கம் 4 :



நீங்கள் வெற்றி பெற்றால் மட்டும் பத்தாது. ஒருவர் தோற்று, ஒருவர் வெற்றி பெற்றால், அந்த வெற்றி சரியான வெற்றி இல்லை, வாழ்க்கையில்!

விளையாட்டில் வேண்டுமானால் அது சரி, வாழ்க்கையில் இருவரும் வெற்றி பெற வேண்டும்! எப்படி?

இப்போது நீங்கள் ஒரு புத்தகம் படிக்கிறீர்கள்! அந்த புத்தகம் இந்த "அந்த 7 பழக்கங்கள்" புத்தகம் போல மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, என்று வைத்துக்கொள்வோம். இப்போது நீங்கள் அந்தப் புத்தகம் மூலமாக பயன் பெற்றது போல், நீங்கள் அந்த புத்தகத்தை எழுதியவருக்கு புத்தகத்திற்கான பணத்தைகொடுத்தால், அவருக்கும் பயன்படும்! எழுதியவரும் வெற்றி பெற்றார், படித்தவரும் வெற்றி பெற்றார்! இதுதான் இந்த அருமையான பழக்கம்!

பழக்கம் 5 :


உங்களை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்!நீங்கள் அவரைப் புரிந்துகொள்ள முயற்சி செயுங்கள்!

காது கொடுத்து கேளுங்கள். கடவுள் இரண்டு காது கொடுத்துவிட்டு வாயை ஒன்றுதான் கொடுத்துள்ளார்! நாம் பேசுவதை விட கேட்பது தான் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தன் அப்படிச் செய்து உள்ளார்!

பழக்கம் 6 :



சிநேர்ஜி அதாவது ஒன்று சேர்ந்து சாதித்தல்! ஒரு கூட்டு முயற்சியாக ஒரு டீமா சேர்ந்து செயல்படும் ஆற்றல் தான் இந்த பழக்கம். பலபேருடன் பழகிவிட்டுக்கொடுத்து ஒரு தோழமை மனப்பான்மையுடன் எல்லோரும் சேர்ந்து வெற்றி பெறுவதுதான் இந்தப் பழக்கத்தின் அடையாளம்!

இப்பொழுது நீங்கள் பார்த்த மூன்று பழக்கங்களும் இன்டெர்டெபெண்டன்ஸ் வளர்க்க உதவும்.

பழக்கம் 7 :


இறுதி பழக்கம். ஆனால் உறுதி பழக்கம். உங்கள் அறிவைப் பயன்படுத்தி உபகரணங்கள் கண்டுபிடித்து எல்லா செயலையும் எளிதாக செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

உடலை செம்மைப்படுத்த பயிற்சி மூளையை செம்மைப்படுத்த படிப்பு இதயத்தை செம்மைப்படுத்த அன்பு ஆத்மாவை செம்மைப்படுத்த தியானம்!

நீங்கள் ஒரு முழுமையான மனிதனாக மாற உங்கள் திறமைகளை கூர் படுத்துக் கொள்ளுங்கள்!

நீங்கள் ஒரு செயலை எளிதாகச் செய்ய வேண்டும் என்றால் உங்கள் ஆயுதங்கள் மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும்!

நீங்கள் ஒரு வேலையை கஷ்டப்பட்டு செல்கிறீர்கள் என்றால் நீங்கள் சரியான இயந்திரங்களை பயன்படுத்தவில்லை என்று அர்த்தம்!



கடினமாக உழைக்க வேண்டும் என்று இல்லை அறிவைப் பயன்படுத்தி புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பது தான் இந்த பழக்கத்தின் நோக்கம்!

வாழ்த்துக்கள்! தெரிந்து கொண்ட எல்லா பழக்கத்தையும் செயல்படுத்துங்கள் கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்!



Post a Comment

0 Comments